விஜய் டிவியில் இன்று முதல் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.
இதை முதன்முறையாக கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
அவர்களின் பெயர் பட்டியலை கமல் அறிவித்து அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
முக்கியமாக இந்த வீட்டில் உள்ளே தமிழில்தான் பேச வேண்டும் என்பது விதிமுறையாம்.
அந்த பிரபலங்கள் இவர்கள்தான்…
- மாநகரம் பட நடிகர் ஸ்ரீ என்ற ஸ்ரீராம்
- நடிகை அனுயா (சிவா மனசுல சக்தி)
- காமெடி நடிகர் வையாபுரி
- நடன இயக்குனர், நடிகை, அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம்
- நாடோடிகள் நடிகர் பரணி
- இந்திய அழகி போட்டியில் கலந்து கொள்ளவிருப்பவர் மாடல் ரைஷா
- எழுத்தாளர், கவிஞர், நடிகர் சினேகன்
- நடிகை ஓவியா
- நடிகை ஆர்த்தி
- நடிகர் ஆரவ்
- நடிகர் கஞ்சா கருப்பு
- ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட பெண் நர்ஸ் ஜுலி
- நடிகர் கணேஷ் வெங்கட்ராம்
- இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்திவேல் வாசு
- நடிகை நமீதா
இனி 100 நாட்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தால் இதில் யார் வெல்வார்கள் என்பது தெரியும்.?
Official list of 14 celebrities participate with Kamal in Big Boss TV show
0 comments:
Post a Comment