பரத்-ல் சல்மான்கான்
26 ஜூன், 2017 - 15:45 IST
டியூப்லைட் படத்தை தொடர்ந்து சல்மான் கான் டைகர் ஜிந்தா ஹே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர், வான்ட்டட்-2, தபாங்-3 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் அதுல் அக்னிகோத்ரியின் தயாரிப்பில் ஒரு படத்தில் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கும் இப்படத்திற்கு "பரத்" என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், தற்போது படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருவதால் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment