Sunday, June 25, 2017

என்னை தூங்கவிடாமல் செய்த முதல் இயக்குனர் மணிரத்னம் - சொல்கிறார் பாரதிராஜா


என்னை தூங்கவிடாமல் செய்த முதல் இயக்குனர் மணிரத்னம் - சொல்கிறார் பாரதிராஜா



25 ஜூன், 2017 - 09:42 IST






எழுத்தின் அளவு:






Bharathiraja-praises-Maniratnam


என்னை கோடம்பாக்கத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு கிராமப் புறங்களுக்கு சினிமாவை எடுத்துச் சென்றவர் பாரதிராஜா என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் எனக்கு பிறகு சினிமாவிற்கு வந்த இயக்குனர்களிடம் எனது பாதிப்பு இருந்தது. ஆனால் இப்போதைய இயக்குனர்களிடம் எனது பாதிப்பு இல்லை. மணிரத்னத்தின் பாதிப்புதான் இருக்கிறது என்கிறார் பாரதிராஜா.

அவர் மேலும் கூறுகையில், மணிரத்னம் அதிகம் பேச மாட்டார். பெரிய அறிவு ஜீவி. அவரிடம் செயல்தான் அதிகமாக இருக்கும். நானெல்லாம் அதிகமாக பேசுவேன் செய்கிறேனா என்பது தெரியவில்லை. முக்கியமாக, மணிரத்னம்தான் என்னை சினிமாவில் தூங்க விடாமல் செய்த முதல் இயக்குனர். அவர் இயக்கிய நாயகன் படம் பார்த்து அசந்து விட்டேன். அதற்கு முன்பே அவர் இயக்கிய பகல் நிலவு படத்தை பார்த்தேன்.

யாரையும் தழுவாமல் தனித்துவமாக இயக்கியிருந்தார். ஒரு புதுமாதிரியாக அவர் படம் இருந்தது. அற்புதமான படம். அதன்பிறகு நாயகன் படம் பார்த்து விட்டு நீ என்ன கிழிச்சே. இந்த ஆளு பண்ணிட்டார் என என்னை நானே சொல்லிக் கொண்டேன். அந்த படத்தில் இருந்து நான் மணிரத்னத்தின் ரசிகனாகி விட்டேன். இன்றைய தலைமுறைக்கு விதை மணிரத்னம்தான் என்கிறார் பாரதிராஜா.


0 comments:

Post a Comment