பாடலாசிரியருக்கு தங்க மோதிரம் அணிவித்த டி.சிவா
24 ஜூன், 2017 - 14:04 IST
'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரிப்பில் ஓடம் இளவரசு இயக்கியுள்ள படம் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்'. அத்ரவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்டரா, பிரணிதா, அதிதி என நான்குபேர் கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைக்க பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.
'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் டி.சிவாவின் அடுத்த தயாரிப்பான 'பார்ட்டி' பட அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும் அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாக சந்தோஷப்பட்ட டி.சிவா, இசையமைப்பாளர் டி.இமானுக்கு நினைவு பரிசு வழங்கினார். சிறப்பாக பாடல்கள் எழுதியமைக்காக யுகபாரதிக்கு தங்க மோதிரமும் பரிசளித்தார் டி.சிவா.
பாடலாசிரியருக்கு மட்டும் தங்க மோதிரம் அணிவித்தது ஏனோ?
0 comments:
Post a Comment