கோவில் தரையை கழுவி சுத்தம் செய்த 'புரூஸ்லீ' நாயகி..!
24 ஜூன், 2017 - 17:35 IST
நடிகை கீர்த்தி கர்பந்தா தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லீ' படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அந்தப்படம் தனக்கு தமிழில் ஒரு நல்ல இடத்தை பெற்றுத் தரும் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலுங்கில் ராம் சரணுடன் நடித்த 'புரூஸ்லீ'யும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் தற்போது 'அதிதி இன் லண்டன்' என்கிற படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி கர்பந்தா.. இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு லண்டனில் தான் நடைபெற்றுள்ளது. இந்தப்படத்தின் ஷூட்டிங்கிற்காக அங்கே முகாமிட்டிருந்த நாட்களில் ஒருநாள் படக்குழுவினர் அனைவரும் லண்டனிலேயே புனித யாத்திரை கிளம்பினார்களாம். அங்கே உள்ள குருத்வாரா ரொம்பவே பிரசித்தி பெற்றதை அறிந்து அனைவரும் அந்த கோவிலுக்கு சென்றனர்.
கோவிலுக்குள் நுழைந்த கீர்த்தி கர்பந்தா டக்கென அங்கே இருந்த தரையை துடைக்கும் சாதனத்தை கையிலெடுத்தவர் ஈரமான தரையை சுத்தப்படுத்த ஆரம்பித்து விட்டாராம்.. இதை பார்த்த மற்றவர்களும் இந்த சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கி விட்டார்களாம்.. குருத்வாராவை பொறுத்தவரை இப்படி கோவிலை சுத்தம் செய்யும் பணி செய்பவர்கள் மிகுந்த மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்படுவார்களாம். கிட்டத்தட்ட ஒரு வேண்டுதல் போல இதை செய்தாராம் கீர்த்தி கர்பந்தா.
0 comments:
Post a Comment