சதுரங்கவேட்டை-2 படப்பிடிப்பு முடிந்தது
28 ஜூன், 2017 - 12:27 IST
நட்ராஜ் நாயகனாக நடித்து வெளியான படம் சதுரங்கவேட்டை. வினோத் இயக்கிய இந்த படத்தை நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார். அதையடுத்து தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி வருகிறார் வினோத். அதேசமயம், சதுரங்கவேட்டை-2 படத்திற்கும் அவர் ஸ்கிரிட் எழுத, நிர்மல் குமார் அப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அரவிந்த்சாமி - திரிஷா ஆகிய இருவரும் எதிரும் புதிருமான வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோது திரிஷா வேறு சில படங்களிலும் நடித்து வந்ததால் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடந்து வந்தது. இந்நிலையில், இறுதிகட்டமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், நேற்றோடு சதுரங்கவேட்டை-2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பூசணிக்காய் உடைத்து விட்டனர். இந்த படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக ஒரு நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக மெச்சூரிட்டியான வேடத்தில் நடித்திருக்கிறார் திரிஷா.
0 comments:
Post a Comment