பரபரப்பு ஏற்படுத்திய கபாலி நாயகி ராதிகா ஆப்தே
24 ஜூன், 2017 - 16:38 IST
கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர் ஆங்கில பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வருவதோடு, சில பாலிவுட் படங்களில் சர்ச்சைக்குரிய கிளாமர் வேடங்களில் நடித்தும் பரபரப்பு வளையத்திற்குள் சிக்கியவர். அதுமட்டுமின்றி, தனது கிளாமர் போட்டோக்களையும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இத்தாலி நாட்டுக்கு டூர் சென்ற ராதிகா ஆப்தேவும், அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து ஜாலி குளியல் போட்டிருக்கிறார். அந்த காட்சியை புகைப்படமெடுத்து இணையப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த போட்டோக்கள் இப்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment