Thursday, June 29, 2017

பக்தி பாடல்கள் புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார் : உடல் தானம்


பக்தி பாடல்கள் புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார் : உடல் தானம்



29 ஜூன், 2017 - 13:02 IST






எழுத்தின் அளவு:






Soolamangalam-Jayalakshmi-passes-away


சென்னை: "கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம்..." புகழ் பிரபல சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான ஜெயலட்சுமி(வயது 85) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (29ம் தேதி) காலமானார். இளையவரான ஜெயலட்சுமி, தனது சகோதரி ராஜலெட்சுமியுடன் இணைந்து ஏராளமான பக்தி பாடல்களை பாடியுள்ளார். பக்தி பாடல்கள் மட்டுமல்லாது சினிமாவிலும் ஒரு சில பாடல்களை பாடியிருக்கிறார் ஜெயலட்சுமி. ஜெயலட்சுமியின் உடல் பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உடல் தானம் : ஜெயலட்சுமியின் உடல் அவரது விருப்பபடி, மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது.

சூலமங்கலம் சகோதரிகளில் மற்றொருவரான ராஜலட்சுமி ஏற்கனவே கடந்த 1992-ல் காலமானார்.


0 comments:

Post a Comment