பஹத் பாசில் படத்திற்கு குவியும் பாராட்டு
30 ஜூன், 2017 - 16:07 IST
கடந்த வாரம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'ரோல்மாடல்ஸ்' படம் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சுமாரான, கதை, திரைக்கதையால் அந்தப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் குறையவே செய்தது. இந்த நிலையில் ஒருவார இடைவெளியில் மீண்டும் பஹத் பாசில் நடித்துள்ள இன்னொரு படமான 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' படம் வெளியாகியுள்ளது. போனவாரம் வெளியான 'ரோல்மாடல்ஸ்' பட ரிசல்ட் இந்தப்படத்தை பாதிக்குமோ என்கிற சந்தேகமும் இருந்தது.
ஆனால் அந்த சந்தேகத்தை அடித்து தூளாக்கி முதல்காட்சியிலேயே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது இந்தப்படம். அதற்கு காரணமும் உண்டு. கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான மிக முக்கிய படமான 'மகேஷிண்டே பிரதிகாரம்' பட இயக்குனர் திலீஷ் போத்தனும், நாயகன் பஹத் பாசிலும் மீண்டும் இணைந்துள்ள படம் இது என்பதால் வெற்றிக்கும் பொழுதுபோக்கிற்கும் நிச்சயம் உத்தரவாதம் இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். அதன்படியே படமும் இருந்ததால் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடையே தொடர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.
0 comments:
Post a Comment