நான் இறங்கி வந்துவிட்டதாக கருத வேண்டாம் - கமல்
24 ஜூன், 2017 - 14:42 IST
ஹிந்தியில் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் ஒளிப்பரப்பாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது. பிக்பாஸ் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது கமல் பேசியதாவது...
"நான் டி.வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை பங்கேற்கப்போகும் 14 பேர் யார் என்பது எனக்குத் தெரியாது. டி.வி.நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் நான் இறங்கி வந்து விட்டதாக கருத வேண்டாம், ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெரிய நட்சத்திரங்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். நான் இதனை பெருமையாகத்தான் நினைக்கிறேன். சின்னத்திரை மட்டுமல்ல செல்போனுக்குள்ளும் செல்ல எனக்கு ஆசை. நிச்சயம் அதுவும் நடக்கும்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் விஸ்வரூம் 2 பணிகளை தொடங்குகிறேன். அதன் பிறகு சபாஷ் நாயுடு பணிகள் தொடங்கும்". மேலும் மருதநாயகம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் சொல்லமுடியாது எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் சின்னத்திரை கூட அதற்கு உதவலாம் என்றார்.
0 comments:
Post a Comment