ஏஏஏ இரண்டாவது பாகம் வருமா?
28 ஜூன், 2017 - 14:49 IST
கடந்த 10 வருடங்களில் எந்தப்படமும் இப்படியொரு தோல்வியை சந்தித்ததில்லை என்கிற அளவுக்கு பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளது சிம்பு நடித்த ஏஏஏ படம்.
த்ரிஷா இல்லைனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இரண்டாவது படத்திலாவது தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டிருப்பார் என்று பார்த்தால்... முதல்படத்தைவிட மேலும் ஆபாசமான படமாக ஏஏஏ படத்தைக் கொடுத்திருக்கிறார்.
அதனால் இரண்டு நாட்கள் கூட தியேட்டர்களில் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்திதுள்ளது ஏஏஏ படம். சிம்புவுக்கு 8 கோடி சம்பளம் கொடுத்து சுமார் 15 கோடி பட்ஜெட்டில் ஏஏஏ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன், டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் படத்தை வெளியிட்டார். தற்போதைய தகவலின்படி 12 கோடிக்கு மேல் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
எனவே ஏஏஏ படத்தின் இரண்டாம்பாகத்தை தயாரிக்கும் திட்டத்தை மைக்கேல் ராயப்பன் கைவிட்டுவிட்டார். ஒருவேளை சிம்புவே தயாரித்தால் ஏஏஏ-2 படத்தை காணும் பாக்கியம் சிம்பு ரசிகர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
0 comments:
Post a Comment