விற்பனைக்கு வந்த மம்முட்டியின் சட்டைகள்..!
29 ஜூன், 2017 - 16:54 IST
ஒரு நடிகர் நடித்த படம் ஹிட்டானது என்றால் அதில் அவர் பயன்படுத்திய பொருட்களும் மார்க்கெட்டில் பிரபலமாவது வழக்கமானது தான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் மம்முட்டி நடிப்பில் வெளியான 'தி கிரேட் பாதர்' படத்தில் அவர் அணிந்திருந்த உடைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகின. குறிப்பாக அவர் அணிந்து நடித்த சட்டைகள் கடைகளில் கிடைக்காதா என ரசிகர்கள் தேடி அலைந்த நிகழ்வுகளும் நடந்தன.
தற்போது படம் வெளியாகி நூறாவது நாளை நெருங்கும் வேளையில் மம்முட்டி சட்டைகள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோன்றுதான் புலி முருகன் படத்தில் மோகன்லால் பயன்படுத்தியது போன்ற செருப்பு விற்பனைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது... ஆனால் அது படம் வெளியான அந்த மாதமே விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment