முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு மார்கெட் உருவாகியுள்ளது.
இவர் நடித்த வேலைக்காரன் படம் முடிவடைந்த நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார்.
இதில் சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்க, இமான் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் தொடங்கி இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் இதன் தொலைக்காட்சி உரிமையை பிரபல சன்டிவி வாங்கியுள்ளது.
இதனை இப்பட தயாரிப்பு நிறுவனம் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Vijay Tv and Sun Tv bagged satellite rights of Sivakarthikeyan movies
0 comments:
Post a Comment