என் வாழ்க்கை படம் போராக இருக்கும் : ஷாருக்கான்
29 ஜூன், 2017 - 09:44 IST
நடிகர் ஷாருக்கான் தற்போது ஜாப் ஹாரி மெட் சீஜல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானிடம், உங்கள் வாழ்க்கையை படமாக எடுக்க எந்த டைரக்டரையாவது அனுமதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஷாருக், மக்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் எதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. உங்களுக்கு நல்ல கதை எதுவும் கிடைக்கவில்லை என்றால், நான் வேண்டுமானால் எழுதுகிறேன். அவர்கள் அப்படி என்ன என்னை பற்றி படமாக எடுக்கப் போகிறார்கள். எனது வாழ்க்கையின் வெற்றியின் கதையாக தான் இருக்கும்.
அந்த மிகவும் போராக இருக்கும். ஒருவேளை அது சர்ச்சையாக்கப்படலாம். அப்படி சர்ச்சையாகா விட்டால் அது போரான கதையாக தான் இருக்கும். நிஜமாகவே வெற்றி கதைகள் அனைத்தும் போரான கதைகளாகவே இருக்கும் என்றே நான் சொல்வேன். அதனால் அத்தகைய கதையை யாரும் எடுப்பதை நான் விரும்பவில்லை. அதே சமயம் என் வாழ்க்கை படத்தை யாரும் எடுக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு என் வாழ்க்கை இதுவரை பெரிய விஷயமாக இருந்ததில்லை என்றார்.
0 comments:
Post a Comment