Saturday, June 24, 2017

'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சிக்கிய 'அஅஅ'


'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சிக்கிய 'அஅஅ'



24 ஜூன், 2017 - 14:55 IST






எழுத்தின் அளவு:






Yesterday-Anjaan,-Today-AAA


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடித்து 2014ம் ஆண்டு வெளிவந்த 'அஞ்சான்' என எந்த நேரத்தில் படத்திற்குப் பெயர் வைத்தார்களோ, படம் வெளிவந்த பின் பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் எழுந்த விமர்சனங்களைப் பார்த்து படக்குழுவினர் மிகவும் 'அஞ்ச' வேண்டியதாகியது. அது போன்றதொரு நிலைமை தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு படங்களுக்குமே பெயர் பொருத்தம் உள்ளதும் அதற்குக் காரணமோ என்னமோ?.

எடுக்கப்பட்ட சில காட்சிகளையும் இரண்டு பாடல்களையும் மட்டும் வைத்து எடுத்தவரை படத்தை வெளியிட்டு விடுவோம் என்று சொல்லி ஒட்டு மொத்தகமாவே படம் பார்க்கும் ரசிகர்களையும் அவமானப்படுத்தியிருக்கிறார்கள். ஏகப்பட்ட ஆபாசமான வசனங்களை படம் முழுக்க வைத்து, இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு, என் எதிர்ப்பாளர்கள் முதல் மூன்று நாட்கள் படத்தைப் பார்க்க வரவேண்டாம் என்று சிம்பு எந்த தைரியத்தில் சொன்னார். இதை மறைக்கத்தான் அப்படி சொல்லியிருப்பாரோ...?.

விமர்சகர்களும், சமூக வலைத்தளங்களிலும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை சரமாரியாக கமெண்ட் செய்து வருகிறார்கள். திரையுலகில் தற்போது இருக்கும் நடிகர்களை விட மிகவும் திறமைசாலியாக பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள சிம்பு, அவருடைய ரசிகர்களுக்காகவாவது பொறுப்பான படங்களைக் கொடுப்பாரா என்பது இனியும் சந்தேகம்தான்.

விஜய், அஜித் வரிசையில் அடுத்த இடத்தில் வர வேண்டியவர் யார் சொல் கேட்டு, அல்லது கேளாமல் இப்படி போகிறாரே என கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்வது 'அஅஅ' படத்திற்குப் பிறகும் வாடிக்கையாகிவிட்டது.


0 comments:

Post a Comment