Thursday, June 22, 2017

"மெர்சல்" உடன் விஜய் பிறந்தநாள்


"மெர்சல்" உடன் விஜய் பிறந்தநாள்



22 ஜூன், 2017 - 12:15 IST






எழுத்தின் அளவு:






Vijay-Birthday-with-Mersal


இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். 16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று 60 படங்களை தாண்டி நிற்கிறார் விஜய். விஜய்யின் திரை பயணத்தில் வெற்றி, தோல்வி சம அளவில் தான் இருக்கின்றன. இன்று(ஜூன் 22-ம் தேதி) நடிகர் விஜய் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் விஜய், கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்தாண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.

ஆனால், விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் என கொண்டாடி வருகின்றனர். அதோடு விஜய்யின் 61வது படத்தின் தலைப்பு மெர்சல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள், இந்த பிறந்தநாளை மெர்சலாக கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் மெர்சல் தான் டிரெண்ட்டிங்கில் உள்ளது.


0 comments:

Post a Comment