Tuesday, June 20, 2017

ஊறுகாய் வியாபாரம் செய்கிறார் ஸ்ரீதேவி


ஊறுகாய் வியாபாரம் செய்கிறார் ஸ்ரீதேவி



21 ஜூன், 2017 - 10:56 IST






எழுத்தின் அளவு:






TV-Actress-Sridevi-doing-Urukai-business


புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தவர் ஸ்ரீதேவி. அதன்பிறகு செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். தற்போது ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகைகளில் அதிகம் படித்த நடிகைகளில் இவரும் ஒருவர் பி.எஸ்சி நியூட்ரீசியன், எம்.பி.ஏ எச்ஆர் மேனேஜ்மெண்ட், எம்.எஸ்.சி சைக்காலஜி படித்திருக்கிறார். இப்போது எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்துக் கொண்டிருக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீதேவியின் இன்னொரு முகம் சின்னத்திரை த்ரிஷா. தெரு நாய்களை தத்தெடுத்து வளர்க்கிறார். விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறார். ரோட்டில் அடிபட்டு கிடக்கும் விலங்குளை காப்பாற்றி குணப்படுத்துவது ஸ்ரீதேவிக்கு பிடித்த வேலை. இது தவிர தனது அம்மாவுக்காக மிரப்பகாய் என்கிற நிறுவனம் தொடங்கியிருக்கிறார். ஊறுகாய், பொடி மற்றும் மசாலா வகைகளை விற்கும் நிறுவனம் இது. இதை பெரிய நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் லட்சியம்.


0 comments:

Post a Comment