Wednesday, June 21, 2017

‘விஐபி 2′ பட டிரைலர்-பாடல்கள் வெளியீட்டு தேதி


VIP2 movie Songs and Trailer release date is hereசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2 (‘விஐபி 2′)


இதன் சூட்டிங் முடிவடைந்து, தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இதன் பாடல்களை ஜீன் 25ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதே நாளில் தமிழ், தெலுங்கு மொழி டிரைலரும் வெளியாகும் எனவும், இந்தி டிரைலர் ரிலீஸ் தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

தனுஷ் உடன் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்டோர் நடிக்க, இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு அவர்களும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

VIP2 movie Songs and Trailer release date is here

0 comments:

Post a Comment