Tuesday, June 20, 2017

‘ரஜினி என்ற சிங்கம் சிங்கிளா வரும்…’ – கட்சி பிரமுகர் பேட்டி


Rajinikanth with Arjun Sampathரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற செய்தி வெளியானதுமே சில எதிர்ப்பு குரல்கள் ஆங்காங்கே கிளம்பின.


ஆனால் தற்போது ரஜினிக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து அவர்கள் ஒதுங்கி விட்டார்களா? என எண்ணத் தோன்றுகிறது.

தமிழக அரசியலில் ரஜினியால் பெரிய மாற்றம் ஏற்படும் என விசிக தலைவர் திருமாளவளவன் தெரிவித்து இருந்தார்.

இவரைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி யை சேர்ந்த அர்ஜூன் சம்பத் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது..

“அரசியலுக்கு வருவதை ரஜினி முடிவு செய்து அதற்கான பணிகள் இறங்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார்.

அவரது தலைமையில் ஆட்சி அமைத்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவரை எந்த கட்சியும் இயக்கவில்லை. அவர் சுயமாக முடிவெடுப்பவர்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு காவிரி நீர் பிரச்சினையில் ரஜினி மௌனமாக இருப்பதை கண்டித்து, அவருக்கு உப்பு பார்சலை இந்த கட்சி அனுப்பியதாக கூறப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

0 comments:

Post a Comment