ராஜமவுலி வீட்டுக்கு வந்த புதிய வரவு..!
20 ஜூன், 2017 - 14:42 IST
பாகுபலி படத்திற்கு ராஜமவுலி எவ்வளவு சம்பளம் வாங்கினர் என்பதோ, அல்லது அவருக்கு படத்தின் லாபத்தில் எவ்வளவு பங்கு கிடைத்தது என்பதோ தங்கமலை ரகசியம் தான்.. ஆனால் கடந்த சில நாட்களாக ராஜமவுலி தனக்கு பிடித்தமானவற்றை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார் என்பது மட்டும் அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் நன்றாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் உள்ள தோனபந்தா என்கிற கிராமத்தில் நூறு ஏக்கரில் இடம் வாங்கியுள்ள ராஜமவுலி அங்கே மிகப்பெரிய பண்ணை வீட்டை நிர்மாணிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானது.
உடனே ராஜமவுலி ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்கி விட்டார் என்றுகூட சிலர் சொல்ல ஆரம்பித்தார்கள்.. இதோ இப்போது அவரது வீட்டிற்கு புதிய வரவாக BMW 7 கார் ஒன்று வருகை தந்துள்ளது.. ஆம்.. சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த காரை இப்போதுதான் வாங்கியுள்ளார் ராஜமவுலி. இன்னும் அடுத்த படத்திற்குள் கமிட் ஆகாத ராஜமவுலி அதற்கு முன் இந்த ஐந்து வருட காலத்தில் தான் ஒதுக்கி வைத்திருந்த ஆசாபாசங்களில் சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ள முனைந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.
0 comments:
Post a Comment