Tuesday, June 20, 2017

ஜிஎஸ்டி விளம்பர தூதராக அமிதாப் நியமனம்


ஜிஎஸ்டி விளம்பர தூதராக அமிதாப் நியமனம்



20 ஜூன், 2017 - 10:52 IST






எழுத்தின் அளவு:






Amitabh-bachchan-appointed-to-Promote-GST


மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி என்ற பெயரில் வருகிற ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும், எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வருகிறது. இதனால் ஜிஎஸ்டி வரி குறித்து மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக அமிதாப் பச்சனை, ஜிஎஸ்டி விளம்பர தூதுவராக மத்திய அரசு நியமித்துள்ளது.

முதல் கட்டமாக அமிதாப் நடித்துள்ள 20 விநாடி விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அமிதாப் தேசிய கொடியின் மூவர்ணம் போல ஜி.எஸ்.டி ஒருங்கிணைந்த தன்மை கொண்டது என்று அந்த விளம்பர படத்தில் மக்களுக்கு கூறுகிறார். ஒரே தேசம், ஒரே வரிவிதிப்பு, ஒரே சந்தை என்ற தாராக மந்திரத்தை சொல்கிறார். அமிதாப்புக்கு முன்பு ஜிஎஸ்டியின் தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கணை பி.வி.சிந்து நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment