மீண்டும் காமெடி வேடத்தில் நடித்த ஒய்.ஜி.மகேந்திரன்!
20 ஜூன், 2017 - 11:56 IST
ரஜினி-கமல் நடித்த ஏராளமான படங்களில் காமெடியனாக நடித்தவர் ஒய்.ஜி.மகேந்திரன். நாடக நடிகரான இவர் தமிழ்நாடு மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் பல மேடை நாடகங்களை நடத்தி வருகிறார். இப்போது வரை ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நாடகத்தில் பயிற்சி பெற்ற பலர் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும், ஒருகட்டத்தில் காமெடி வேடங்களில் இருந்து விடுபட்டு குணசித்ர நடிகரான ஒய்.ஜி.மகேந்திரன், தற்போதும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான சைத்தான், கடம்பன், இணையதளம் போன் ற படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்த அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" படத்தில் மீண்டும் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவர் நடித்துள்ள காமெடி காட்சிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் வகையில் உள்ளதாம். அதோடு, கவுண்டமணி - செந்தில் நடித்த வாழைப்பழ காமெடி போன்று ஒரு டிரண்டை ஏற்படுத்தும் வகையில் அவர் நடித்துள்ள காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம். இதை தன்னை சந்திப்பவர்களிடம் பெருமையாக கூறி வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
0 comments:
Post a Comment