Tuesday, June 20, 2017

தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்: விஷாலுக்கு ஏ.எல்.விஜய் கோரிக்கை


தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்: விஷாலுக்கு ஏ.எல்.விஜய் கோரிக்கை



20 ஜூன், 2017 - 12:36 IST






எழுத்தின் அளவு:






AL-Vijay-requests-Vishal-to-save-producers


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜூன் 23-ந் தேதி திரைக்கு வரும் படம் வனமகன். ஜெயம்ரவி, சாயிஷா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமைய்யா, வருண் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மதன்கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது ஏ.எல்.விஜய் பேசும்போது, வனமகன் படம் உருவாக காரணம் ஜெயம்ரவி. ரொம்ப ரொம்ப கஷ்டமான படம். நான் நினைத்தபடியே இந்த படம் உருவாகியிருக்கிறது. ஜெயம் ரவி இல்லையென்றால் இது நடக்க சாத்தியமில்லை. அவர் இல்லையென்றால் இந்த படத்தில் யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அவ்ளோ உழைப்பை கொடுத்திருக்கிறார். மரத்தில் ஏறுவது, தாண்டுவது என பயிற்சி எடுத்து நடித்தார். நிறைய அடிபட்டிருக்கு. அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நடித்தார். இது எனது பத்தாவது படம். எல்லா சவால்களையும் எதிர்கொண்டேன்.

இந்த படத்திற்காக சாயிஷாவை தமிழுக்கு கூட்டி வந்ததற்கு சந்தோசப்படுகிறேன். அவர் ஒரு பெஸ்ட் ஆக்டர். ஒரு கம்ப்ளீட்டு ஆர்ட்டிஸ்ட் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். அவர் நிறைய படங்களில் நடிப்பார். முதல் பாதியில் ஜெயம்ரவி, தம்பிராமைய்யா, சாயிஷாவுக்கு முக்கியத்துவம் உள்ளது. தம்பி ராமைய்யாவின் எனர்ஜி பெரிய விசயம். செட்டுக்குள்ள வரும்போதே எனர்ஜி இருக்கும். அது படத்திலும் வெளிப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒரு புலி பைட் சிறப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த சண்டை காட்சியாக இருக்கும். இந்த வனமகன் படத்தின் பட்ஜெட் போட்டதை விட எகிறி விட்டது. கதைக்கு தேவைப்பட்டதால் சமாதானம் ஆகாமல் அதை செய்தோம். கதைதான் பட்ஜெட்டை நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், இந்த இடத்தில் ஒரு வருத்தமான விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். விநியோகஸ்தர்களுக்கு புரியனும். ஒரு படத்தின் கதையை பார்க்காமல் வேறுமாதிரியாக பார்க்கிறார்கள். அப்படி நினைத்திருந்தால் பாகுபலி மாதிரி படம் வந்திருக்காது. தமிழ் சினிமாவின் நிலைமை வித்தியாசமாக உள்ளது. நான் ஒரு டெக்னீசியன், அவங்க சப்போட் பண்ணனும். இதுவரை நான் விநியோகஸ்தர்களை பார்த்ததில்லை. இந்த படத்தை நாங்களே தமிழ்நாடு முழுக்க விநியோகம் செய்ய போகிறோம். இதை ஒரு சவாலாகத்தான் பார்க்கிறேன். ஒரு பாடமாக நினைக்கிறேன். முதல் தடவையாக இதை சந்திக்கிறேன். இந்த படத்திற்கு இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கக்கூடாது. ஒரு நல்ல படம் வேண்டும் என்பது தான் எங்க குழுவின் எண்ணமாக இருந்தது.

முக்கியமாக, தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஆந்திராவில் பத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படம் தயாரித்து வருகிறார்கள். ஆனால் தமிழில் யாருமே இல்லை. வருத்தமான விசயம். அதனால் சரியான சிஸ்டம் பண்ணி எல்லா தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று விஷாலிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன் என்றார்.


0 comments:

Post a Comment