Tuesday, June 20, 2017

துபாயில் ரஜினியின் 2.O இசை வெளியீடு?









துபாயில் ரஜினியின் 2.O இசை வெளியீடு?



20 ஜூன், 2017 - 11:45 IST






எழுத்தின் அளவு:






2-Point-O-Audio-Launch-in-Dubai


சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படமும் ரொபோட்டிக் கதையில் உருவாகி வருகிறது. ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், வில்லனாக நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. 2.O படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு மாற்றி விட்டனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை மும்பையில் பிரமாண்டமாக நடத்தினர். இந்நிலையில், இப்படத்தின் இசை இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, பர்ஸ்ட் லுக்கை மும்பையில் வெளியிட்டவர்கள், ஆடியோவை துபாயில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.




Advertisement








அஞ்சலி, ஜெய் காதல் பற்றி தெரியாது: சொல்கிறார் பலூன் இயக்குனர்அஞ்சலி, ஜெய் காதல் பற்றி தெரியாது: ... இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஸ்பைடர் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஸ்பைடர்










0 comments:

Post a Comment