Featured
Recent Posts

Thursday, July 20, 2017


Actor Vishalகடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக தங்களை காட்டி கொண்டவர்கள் விஷால் மற்றும் வரலட்சுமி.


ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அதனால் தன் காதலை முறித்துக் கொண்டதாகவும் வரலட்சுமி தெரிவித்தார்.

தன் ட்விட்டர் பக்கத்தில்… ‘காதலில் பிரேக் அப் என்பது புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது.

7 வருட உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலமாக முறித்துக்கொள்வதாக கூறி உள்ளார். நாடு எங்கே வந்திருக்கிறது என்பதை எண்ணும்போது சிரிப்பு வருகிறது. காதல் எங்கே?’ என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ‘துப்பறிவாளன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது…

‘நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பவன்.

ஆனால் அவரைப் போல பிரம்மச்சாரியாக இருக்கமாட்டேன்.

லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்’ என்றார்.

லட்சுமிகரமான பெண் வரலட்சுமியா? அல்லது வேறு பெண்ணா? என்பதற்கு விஷால்தான் விளக்கம் சொல்லவேண்டும்.

'விஐபி-2' படத்தை தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் இப்போது 'விஐபி-2' படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

'விஐபி-2' படம் மட்டுமல்ல, ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட அஜித் நடித்துள்ள விவேகம் படமும் சில வாரங்கள் ...
அச்சம் என்பது மடமையடா, சத்ரியன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர், மஞ்சிமா மோகன். இரு படங்களுமே, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற போதிலும், கோடம்பாக்கத்தில், அவருக்கு அதிக மவுசு உள்ளது. முன்னணி நடிகர்களில் பெரும்பாலானோர், தங்கள் படங்களில், மஞ்சிமாவை நடிக்க வைக்க, ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், மஞ்சிமாவோ, ...

Nivin Pauly romance with Amala Paul for Kayamkulam Kochunniபிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் நிவின்பாலியின் மார்கெட் சூடுபிடித்துள்ளது.


தென்னிந்தியாவின் பிரபல நாயகிகளான த்ரிஷா மற்றும் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த படத்தில் அமலாபாலுடன் இணைகிறார்.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பு மிலி என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த புதிய படத்திற்கு காயகுளம் கொச்சுன்னி என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூ இயக்கவுள்ளார். இவர்தான் ஜோதிகா நடித்த 36வயதினிலே என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivin Pauly romance with Amala Paul for Kayamkulam Kochunni

சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா. சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் ‘காலா என்ற கரிகாலன்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகரும், ரஜினிகாந்தின் மருமகனுமான, தனுசுக்கு சொந்தமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினேன். இந்த தலைப்பை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவும் செய்துள்ளேன். ‘கரிகாலன் என்ற தலைப்பு’ மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் என்னுடையது ஆகும்.

என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது ரஜினிகாந்தை வைத்து ‘காலா என்ற கரிகாலன்’ படத்தை தொடங்கி உள்ளனர்.

எனவே, என்னுடைய கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை பயன்படுத்த அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த மனு 4-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் தனித்தனியாக பதில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், மனுதாரர் சுமத்தும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தையும் மறுக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


மகேஷ்பாபு படத்தில் இணைந்த அனுஷ்கா



20 ஜூலை, 2017 - 11:47 IST






எழுத்தின் அளவு:






Anushka-joints-in-Mahesh-babu-film


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அதையடுத்து பாரத் அனி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரட்டல்ல சிவா இயக்கும் இந்த படம் அதிரடியான அரசியல் கதையில் உருவாகிறது. 2018 ஜனவரியில் வெளியாகும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் அனுஷ்காவிடம் பேசினர். ஆனால் அவர் வேறு படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார்.

இருப்பினும், பாரத் அனி நேனு படத்தில் மகேஷ்பாபுவுடன் ஒரு பாடலில் நடனமாடுவதற்கு தற்போது அனுஷ்காவிடம் பேசியுள்ளனர். அதற்கு அவரும் சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், பாகுபலிக்குப்பிறகு பிரமாண்ட நாயகி அந்தஸ்தை பெற்று விட்ட அனுஷ்காவின் சம்பளம் எகிறி நிற்கிறதாம். அந்தவகையில், ஒரு பாடலுக்கு நடனமாடவே ரூ.2 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



ஹசீனா வேடத்திற்கு எனது முதல் சாய்ஸ் சோனாக்ஷி தான் - அபூர்வா



20 ஜூலை, 2017 - 14:30 IST






எழுத்தின் அளவு:






Shraddha-was-my-second-choice-for-the-role-of-Haseena-says-Apoorva-Lakhia


நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை, பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. அபூர்வா லக்கியா இயக்க, ஹசீனா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஹசீனா வேடத்தில் நடிக்க முதலில் சோனாக்ஷியை தான் தேர்வு செய்ததாக கூறியுள்ளார் அபூர்வா.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது... "ஹசீனா வேடத்திற்கு, சோனாக்ஷி தான் எனது முதல் சாய்ஸாக இருந்தது. அப்போது அவர் போர்ஸ் 2 படத்தில் நடித்து வந்தார். ஜான் ஆபிரஹாமிற்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டதால் படம் முடிய தாமதம் ஏற்பட்டது. அதனால் எனது படமும் ஆரம்பிக்க தாமதமானது. ஆகையால் சோனாக்ஷியை விடுத்து எனது அடுத்த சாய்ஸான ஸ்ரத்தாவை தேர்வு செய்தேன். ஸ்ரத்தா 17 வயது பெண்ணாகவும், 45 வது பெண்ணாகவும் சிறப்பாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர்" என்று கூறியுள்ளார்.

ஹசீனா படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.