Saturday, May 6, 2017

ரீ-என்ட்ரி: பயந்த மனீஷா கொய்ராலா


ரீ-என்ட்ரி: பயந்த மனீஷா கொய்ராலா



06 மே,2017 - 17:20 IST






எழுத்தின் அளவு:








தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. திருமணம், அதன்பிறகு அந்த வாழ்வில் ஏற்பட்ட முறிவு, புற்றுநோய் பாதிப்பு... என சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்தார் மனீஷா. இந்நிலையில் அவை எல்லாவற்றிலுமிருந்து இருந்து மீண்டு, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அவர், ஹிந்தியில் டியர் மாயா என்ற படத்தில் முதன்மை ரோலில் நடித்திருக்கிறார். சுனைனா பகத்நகர் இயக்கி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

டியர் மாயா படத்தின் டிரைலர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மனீஷா, "இந்தப்படத்தில் நடிக்க நான் மிகவும் பயந்தேன். நான் நடிப்பது சரியா... தவறா... என்று கூட தெரியவில்லை. இன்றைக்கு சினிமா நிறைய மாறிவிட்டது. ஆகையால் நான் அவர்களுக்கு ஏற்றபடி ஷூட்டிங் முடியும் வரை என்னை மாற்றி கொண்டு நடித்தேன். இந்தப்படம் முடியும் வரை நான் பயந்து தான் நடித்தேன் என்பதை இயக்குநர் அறிந்திருக்க மாட்டார் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

டியர் மாயா படம் வருகிற ஜூன் 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


0 comments:

Post a Comment