ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல?
05 மே,2017 - 03:12 IST
படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பதாகக் கூறி, என்னென்னவோ பெயர்களில் தலைப்பு வைக்கின்றனர். சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் படத்துக்கு, ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல என, பெயர் சூட்டியுள்ளனர். தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்னையில் மாட்டி கொள்கிறார். அந்த பிரச்னை என்ன; அதில் இருந்து, அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான், படத்தின் கதையாம். 'முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஹீரோயினாக நடிப்பது, புது அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்கிறார்,
சஞ்சிதா ஷெட்டி.
Advertisement
0 comments:
Post a Comment