ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது - நக்மா
07 மே,2017 - 14:38 IST
ரஜினியின் சினிமா பயணத்தில் முக்கியமானதும், அவருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வௌிவந்த இப்படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டானது. இதில் ரஜினி ஜோடியாக நக்மா நடித்திருந்தார். ரஜினியுடன் இவர் நடித்த ஒரே படமும் பாட்ஷா தான். தற்போது நக்மா, சினிமாவை விட்டு முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். இவர், தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் சென்னை வந்துள்ள நக்மா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு சென்று ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடந்தது. ரஜினியுடனான சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, இது அரசியல் ரீதியான சந்திப்பு கிடையாது என்றார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த நக்மா, ரஜினி அரசியலுக்கு வருவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது, வந்தால் தலைசிறந்த தலைவராக இருப்பார் என்பது என் தனிப்பட்ட கருத்து என்றார்.
0 comments:
Post a Comment