
இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார். அதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமும் தாதா பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. வருகிற மே 28-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment