Sunday, May 7, 2017

அரவிந்த்சாமி படத்தில் செண்டிமென்ட் பாடல் பாடிய கங்கை அமரன்!


அரவிந்த்சாமி படத்தில் செண்டிமென்ட் பாடல் பாடிய கங்கை அமரன்!



07 மே,2017 - 12:18 IST






எழுத்தின் அளவு:








நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி- திரிஷா ஜோடி சேர்ந்துள்ள படம் சதுரங்கவேட்டை-2. பணம் சம்பந்தப்பட்ட ஒரு கான்செப்டில் இந்த படம் தயாராகியுள்ளது. அரவிந்த்சாமி-த்ரிஷா இருவரும் கணவன்-மனைவி என்றாலும் கதைப்படி எதிரும் புதிருமான கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமியின் மகளான காமெடியன் கொட்டாச்சியின் 5 வயது மகள் மானஸ்வி நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் அப்பா-மகள் பாடும் ஒரு செண்டிமென்ட் பாடல் இந்த படத்தில் உள்ளது. அஸ்வமித்ரா இசையில் அந்த பாடலை கங்கை அமரன் பாடியிருக்கிறார். பாச உணர்வுகளை சித்தரிக்கும் அந்த பாடலை மிக உருக்கமாக பாடியிருக்கிறாராம் கங்கைஅமரன்.


0 comments:

Post a Comment