மீண்டும் போலீஸ் அதிகாரியாக கார்த்திக்
04 மே,2017 - 17:41 IST
சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் அடுத்து இயக்கி வரும் படம் தீரன் அத்யாயம் ஒன்று. கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கார்த்திக்கின் கேரக்டர் பெயர் தீரன். துப்பறிவதில் கில்லாடியான போலீஸ் டி.எஸ்.பி தீரன் கைக்கு ஒரு முக்கியமான கேஸ் வருகிறது. அதன் பின்னால் செல்லும் தீரன், இந்தியா முழுக்க பயணிக்க வேண்டியது இருக்கிறது. ஒரு சம்பவத்தின் பின்னால் எத்தனை மனிதர்கள், எத்தனை இடங்கள், தொடர்பு இருக்கிறது என்பதை ஆச்சர்யத்துடனும், திடுக்கிடும் சம்பவங்களுடனும் விளக்கப்போகிறது படம். பெரும்பகுதி கதை வட இந்தியாவில் நடக்கிறது. கொழுத்தும் வடநாட்டு வெயிலில் தொடர்ந்து 42 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு திரும்பியிருக்கிறார்கள். காற்று வெளியிடை படத்துக்காக குளிர் நடுங்கிய கார்த்தி, தீரன் அதிகாரம் ஒன்றுக்காக வெயிலில் காய்ந்திருக்கிறார்.
0 comments:
Post a Comment