Thursday, June 15, 2017

ஜூட்வா-2 சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்கவில்லை : சல்மான்


ஜூட்வா-2 சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்கவில்லை : சல்மான்



15 ஜூன், 2017 - 14:29 IST






எழுத்தின் அளவு:








சல்மான் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் ஜூட்வா. இதன் இரண்டாம் பாகம் தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகி வருகிறது. வருண் இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக டாப்சி மற்றும் ஜாக்குலின் நடிக்கின்றனர். டேவிட் தவான் இயக்க, சஜித் தயாரிக்கிறார். ஜூட்வா-2வில் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதை சல்மான் மறுத்திருக்கிறார்.

இதுகுறித்து சல்மான் கூறியிருப்பதாவது... "ஜூட்வா-2 படத்தில் நடிப்பது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை, இந்தப்படத்தில் ஒரு பாடலிலும் நான் தோன்றவில்லை, அப்படியொரு எண்ணமும் எனக்கு இல்லை" என்று கூறியுள்ளார்.

சல்மான், தற்போது டியூப்லைட் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஜூட்வா-2 படம் செப்., 29-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


0 comments:

Post a Comment