Thursday, June 15, 2017

பீச்சாங்கை விமர்சனம்






பீச்சாங்கை விமர்சனம்

புதுமுகங்களை கொண்டு ஒரு புதுமையான திரைக்கதையை அமைத்து களம் இறங்கியிருக்கிறார்கள் இந்த பீச்சாங்கை குழு.


கதைக்களம்…


ஹீரோ கார்த்திக் (படத்தில் ஸ்மூத்) பிக்பாக்கெட் திருடன். தன் பீச்சாங்கையாலே ப்ளேடு போட்டு பர்ஸ் அடிப்பதில் வல்லவன்.


ஒருமுறை இவரின் பிக்பாக்கெட் தோழி, ஒரு பெரியவர் தன் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 3 லட்ச ரூபாயை அடித்துவிடுகிறார்.


ஆனால் மனம் மாறும் இவர் பணத்தை திருப்பிக் கொடுக்க, அந்த பிக்பாக்கெட் நட்பில் விரிசல் விழுகிறது.
பணம் கொடுத்த இடத்தில் அந்த பெண்ணிடம் காதல் மலர்கிறது.


இந்நிலையில் ஒரு அரசியல்வாதி, தன் முன்னேற்றத்திற்காக சபல புத்திக் கொண்ட மற்றொரு அரசியல்வாதியின் ஆபாச வீடியோ கொண்ட செல்போனை ஒரு கும்பலிடம் திருடச் சொல்கிறார்.


அந்த கும்பல் பிக்பாக்கெட் திருடனிடம் வர, இவரும் அடித்து வருகிறார். அப்போது விபத்து ஏற்பட்டு, இவரது மூளையில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது.


அதாவது இவரது பீச்சாங்கை இவரது வலது மூளையில் பேச்சை கேட்காமல் செயல்படுகிறது. அந்த நோய்க்கு Alien Hand Syndrome என்றும் சொல்கிறார்கள்.


இதனால் இவருக்கு உண்டாகும் பிரச்சினைகளை என்ன? அந்த செல்போனை வைத்துக் கொண்டு அந்த அரசியல்வாதி என்ன செய்தார்? அந்த கும்பலை இவரை என்ன செய்தது? என்பதை டார்க் ஹியூமர் வழியில் சொல்லியிருக்கிறார்கள்.

கேரக்டர்கள்…


படத்தின் ஹீரோ பீச்சாங்தைதான். அதனை வைத்துக் கொண்டு இவர் செய்யும் சேஷ்டைகள் ரசிக்க வைக்கிறது.


அசல் பிக்பாக்கெட் திருடன் போலவே யதார்த்தமாக இருக்கிறார். பார்ப்பதற்கு நடிகர் விமல் போலவே இவரும் இருக்கிறார்.


ஹீரோயின் அஞ்சலி ராவ் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். பார்த்த சில நேரத்தில் காதல். பின்னர் மோதல். பின்னர் காதல் என்பதால், சில பெண்களின் ஆழமான மாறும் காதலை உணர்த்துகிறது.


பீச்சாங்கைக்கு அசைன்மெண்ட் கொடுக்கும் ஒரு கும்பலும், அதனை சார்ந்த அரசியல்வாதிகளும் அருமையான தேர்வு. குண்டு மொட்டை, வழுக்கை, அரசியல்வாதியின் அடியாட்கள் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.


அரசியல்வாதியாக வரும் எம்எஸ் பாஸ்கர் இந்த காமெடி கூட்டணியில் இருந்திருந்தால் மற்றவர்கள் விட ஸ்கோர் செய்திருப்பார். ஆனால் அவரை சீரியசாக பயன்படுத்திவிட்டார் இயக்குனர் அசோக்.


தொழில்நுட்ப கலைஞர்கள்..


கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.


பாடலுக்கு படத்தில் வேலையில்லை என்று பாடல் வரிகளே சொல்லிவிட்டது.


ஆனால் பாலமுரளி இசையில் பின்னணியில் ஒலிக்கும் பீச்சாங்கை வரிகளும் அந்த பின்னணி இசையும் நன்றாகவே ரசிக்க வைக்கிறது.


98% பேர் வலதுகையை பயன்டுத்தி வருகிறோம். எனவே இந்த பீச்சாங்கை கான்செப்ட் ரசிகர்களுக்கு கொஞ்சம் புதிதாக இருக்கலாம்.


கடைசி அரை மணி நேர காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கிறது.


அருமையான கான்செப்டை செலக்ட் செய்த அசோக், இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.


பீச்சாங்கை… கை விடாது





  • Tags:

  • left hand, peechankai, peechankai rating, peechankai review, Peechankai review rating, பீச்சாங்கை கார்த்திக், பீச்சாங்கை திரைவிமர்சனம், பீச்சாங்கை நடிகர்கள், பீச்சாங்கை படம், பீச்சாங்கை பழக்கம், பீச்சாங்கை விமர்சனம்

0 comments:

Post a Comment