Thursday, June 15, 2017

நடிப்பிலிருந்து ஓய்வு, முடிவை மாற்றிய மனோஜ்


நடிப்பிலிருந்து ஓய்வு, முடிவை மாற்றிய மனோஜ்



15 ஜூன், 2017 - 15:58 IST






எழுத்தின் அளவு:








தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் நடிப்பிலிருந்து ஓய்வு பெறப் போவதாக நேற்று திடீரென அறிவித்தார். அதையடுத்து தெலுங்குத் திரையுலகத்திலும் மீடியாவிலும் அவர் இப்படி அறிவிக்க என்ன காரணம் என்ற ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் மனோஜ், அந்த டிவிட்டர் பதிவையும் நீக்கிவிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்தார்.

“நான் என்னுடைய அடுத்த படம் பற்றி வழக்கம் போலவே வித்தியாசமான அறிவிப்பு வெளியிட எண்ணியிருந்தேன். ஆனால், அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் சற்று தணிந்ததும் என்னுடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன்,” என அவர் டிவீட் செய்தார்.

ஆனால், அவருடைய அடுத்தடுத்த டிவீட்டுகள் ரசிகர்களின் கிண்டலுக்கும் ஆளாகின. குறும்புக்கார ரசிகர்கள் 'என்ன அண்ணா, அப்பா நல்லா திட்டினாரா' என அதில் டிவீட் செய்தனர். மனோஜின் அப்பா நடிகர் மோகன் பாபு மிகவும் கோபக்காரர் எனப் பெயர் எடுத்தவர்.

மனோஜ் தற்போது நடித்துள்ள 'ஒக்கடு மிகிலாடு' படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் மனோஜ் நடித்துள்ளார்.


0 comments:

Post a Comment