Sunday, June 11, 2017

4 மாதங்களில் 4 தமிழ்ப் படங்களை முடிக்க சமந்தா திட்டம்


4 மாதங்களில் 4 தமிழ்ப் படங்களை முடிக்க சமந்தா திட்டம்



11 ஜூன், 2017 - 14:19 IST






எழுத்தின் அளவு:








நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. அதனால், அதற்கு முன்னதாகவே தான் நடித்து வரும் படங்களை முடித்துக் கொடுக்க சமந்தா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. திருமணத்திற்காக ஓரிரு மாதங்கள் படப்பிடிப்பிடிப்பிலிருந்து விலகியிருக்க சமந்தா முடிவு செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகும் நடக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்காக அவர் விடும் இடைவெளி சம்பந்தப்பட்டப் படங்களின் தாமதத்திற்குக் காரணமாக அமையும் என்பதால் இப்போதிலிருந்தே அந்தப் படங்களுக்காகக் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

விஜய்யுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார் சமந்தா. 'அநீதிக் கதைகள், இரும்புத் திரை' ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்தார். அவற்றில் மீண்டும் விரைவில் நடிக்க உள்ளார். அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பில் வரும் 16ம் தேதி முதல் கலந்து கொள்ள உள்ளாராம். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்திற்கு சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாம். அதனால், சமந்தாவிற்காகவே படப்பிடிப்பை ஜுன் 16ம் தேதி ஆரம்பிக்க உள்ளார்களாம்.

முன்னணி ஹீரோயின்களுடன் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்து சமந்தாவுடன ஜோடி சேருகிறார். இதற்காக சமந்தாவிற்கு வழக்கத்தை விட அதிக சம்பளம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.


0 comments:

Post a Comment