Thursday, June 15, 2017

கமல்ஹாசன், ஜுனியர் என்டிஆர் வரிசையில் ராணா டகுபட்டி


கமல்ஹாசன், ஜுனியர் என்டிஆர் வரிசையில் ராணா டகுபட்டி



15 ஜூன், 2017 - 15:43 IST






எழுத்தின் அளவு:








திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் டிவிக்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு காலத்தில் டிவி என்றாலே சினிமா நடிகர்கள் மட்டமாகப் பார்த்தார்கள். ஆனால், டிவியில் இருந்து ஒவ்வொருவராக சினிமாவில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்தியில் அமிதாப்பச்சன், சல்மான் கான் ஆகியோர் சினிமாவிலிருந்து டிவிக்குப் போனார்கள். ஷாரூக்கான் டிவியிலிருந்துதான் சினிமாவிற்கு வந்தார்.

தமிழில் த்ரிஷா, சிவகார்த்திகேயன், சந்தானம் ஆகியோர் டிவியிலிருந்துதான் சினிமாவிற்குள் வந்தார்கள்.

தமிழில் சினிமாவில் இருந்து டிவிக்கு வந்தவர்கள் பட்டியல் கொஞ்சம் அதிகம்தான். சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர்கள் பின்னர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.

தமிழில் சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, வெங்கட் பிரபு என பலர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா ஆகியோரும் டிவி பக்கம் வந்தார்கள்.

இப்போது கமல்ஹாசனும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் டிவி பக்கம் வந்துள்ளார். இதே நிகழ்ச்சியை தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்க உள்ளார். இவர்களை அடுத்து 'பாகுபலி' புகழ் ராணா டகுபட்டியும் டிவி பக்கம் வந்துவிட்டார்.

ஜெமினி டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'நம்பர் 1 யாரி' என்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க உள்ளார்.

அடுத்து டிவி பக்கம் வரப் போகும் சினிமா நடிகர் யார்?.


0 comments:

Post a Comment