Thursday, June 15, 2017

விருதுகளை குவித்த படம்!


விருதுகளை குவித்த படம்!



16 ஜூன், 2017 - 04:46 IST






எழுத்தின் அளவு:








நடிப்பில் கொடி கட்டி பறக்கும் விஜய் சேதுபதி, அடுத்தபடியாக, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரித்துள்ளார். கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில், குறைந்த கூலிக்கு, கொத்தடிமைகளை போல் வேலை பார்க்கும் தமிழர்களின் அவலமான வாழ்க்கை தான், படத்தின் கதையாம். ஜோக்கர் படத்தில் நடித்த காயத்ரி கிருஷ்ணாவுடன், ஏராளமான புதுமுகங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், அமெரிக்காவிலும் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில், இந்த படம், ஏற்கனவே பல விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment