வேலைக்காரன் படத்தை முடித்துவிட்டு, பொன்ராம் இயக்கும் படத்தில் நாளை முதல் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனிடையில் முன்பே ஒப்புக்கொண்டப்படி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இப்படத்தை சிறுத்தை வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிவா இயக்கவிருக்கிறாராம்.
தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
சூர்யா நடித்த சிங்கம், கார்த்தி நடித்த சிறுத்தை உள்ளிட்ட படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Sivakarthikeyan likely to join soon with Director Siva and Producer Gnanvel Raja
0 comments:
Post a Comment