புகழ் வெளிச்சம் தான் விருதுகளை பெற்று தருகிறது: வைரமுத்து
08 மே,2017 - 10:21 IST
இந்த ஆண்டு தமிழ் சினிமா சார்பில் விருது பெற்ற கவிஞர் வைரமுத்து, ஜோக்கர் இயக்குனர் ராஜு முருகன், எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்செயன், பின்னணி பாடகர் சுந்தரய்யர் ஆகியோர் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைரமுத்து பேசியதாவது:
7 விருதுகள் பெற்றுவிட்டேன். என்னை பார்த்து உங்களுக்கு எதற்கு இத்தனை விருதுகள் என்று கேட்கிறார்கள். அவர்கள் கொடுக்கிறார்கள். நான் வாங்கிக்கொள்கிறேன். தேசிய விருதுக்கு வந்த 434 படங்களை வடிகட்டி, 86 படங்களாக குறைத்து அதில் இருந்து விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து உள்ளனர். நாங்கள் பெற்றுள்ள தேசிய விருதுகளை தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறோம். விருது என்பது திறமையின் அளவுகோல் அல்ல. எங்களைவிட அறிவாளிகள், மேதைகள், விற்பன்னர்கள் நிறையபேர் இந்த சினிமா துறையில் இருக்கிறார்கள். அவர்கள் பெறாத விருதுகளை விளம்பர வெளிச்சம் எங்களுக்கு பெற்று தந்து இருக்கிறது.
தமிழ் கலாசாரம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ் பட உலகில் வாய்ப்பு கொடுத்தால் ஹாலிவுட்டையே தூக்கி சாப்பிடும் திறமைசாலிகள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் இருந்து கதைகளை உருவாக்கி படங்கள் எடுக்கும்படி டைரக்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.
0 comments:
Post a Comment