Thursday, May 4, 2017

‘படையப்பாவுக்கு பிறகு பாகுபலிதான்..’ விநியோகஸ்தர் சக்திவேலன்

Distributor Sakthi Velanகடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 28ஆம் தேதி பாகுபலி2 வெளியாகி இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தவாரம் மே 5ஆம் தேதி வெளியாகவிருந்த எய்தவன் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளார் இதன் விநியோகஸ்தர் சக்திவேலன்.


இதுகுறித்து அவர் கூறியதாவது…

“15 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் இருக்கிறேன். இப்படியொரு ரசிகர்கள் கூட்டம் எந்தவொரு படத்துக்கும் வரவில்லை.


ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்துக்குக் கூட இவ்வளவு கூட்டம் தியேட்டருக்கு வரவில்லை.


குடும்பம் குடும்பமாக மக்கள் பாகுபலியை பார்க்க வருகிறார்கள்.


சினிமாவுக்கே செல்லாதவர்களையும் இப்படம் இழுத்து வந்திருக்கிறது.


‘படையப்பா’ படத்துக்குப் பிறகு, மக்கள் இவ்வளவு கூட்டம் கூட்டமாக வருவது ‘பாகுபலி 2’ படத்துக்குத்தான்.


தமிழக விநியோகத்தில் கண்டிப்பாக இப்படம் முந்தைய சாதனைகளையும் முறியடிக்கும்” என்றார்.


இந்தியளவில் அதிக வசூல் செய்த ‘தங்கல்’ படத்தின் சாதனையை ‘பாகுபலி 2’ முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment