மெழுகு சிலை - பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்திய பாகுபலி
04 மே,2017 - 13:02 IST
உலக அளவில் பிரபலமாக திகழும் கலைஞர்களின் மெழுகு சிலைகள் மேடம் துஷாத் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டுள்ளது. அந்த வகையில், வட இந்தியாவிலுள்ள பிரபல சினிமா நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், அமீர்கான், சல்மான்கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரது மெழுகு சிலைகள் இந்த அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மேடம் துஷாத் அருங்காட்சியகத்தில் தற்போது பாகுபலி பட நாயகன் பிரபாஸின் மெழுகு சிலையும், அவரது பாகுபலி கேரக்டரில் வைக்கப்பட உள்ளது. பாகுபலி படம் மூலம் உலகம் முழுக்க பிரபலமாகிவிட்ட பிரபாஸ்க்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் துசாத்தில் இந்த மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது.
இந்தியாவில் அதிக வசூல் ஈட்டிய படம், பாகுபலி. கூகுளில் தொடர்ந்து அதிகளவில் தேடப்படும் ஒரு நடிகராகத் திகழ்ந்து வருகிறார் பிரபாஸ். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், அவருடைய மெழுகுச் சிலை வைக்க விருப்பம் தெரிவித்தனர். மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு பிரபாசின் 'பாகுபலி' கேரக்டர், இந்தியாவின் செல்வாக்கான பிரபலங்களின் மெழுகுச் சிலை வரிசையில் அமைய இருக்கிறது என்கிறார் பாங்காக் மேடம் டுசாட்ஸ் பொதுமேலாளரான நொப்படான்.
தென்னிந்திய நடிகர்களில் மேடம் துஷாத்தில் நிறுவப்படும் முதல் மெழுகு சிலை பிரபாஸ் உடையதாகும். இந்த பெருமை வேறு எந்த தென்னிந்திய நடிகருக்கும் கிடைக்கவில்லை. ஏன் சினிமாவில் இந்தனை ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்யும் ரஜினி, கமலுக்கு கூட இந்த பெருமை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment