Friday, May 5, 2017

மீண்டும் ரஜினி-தனுஷ் உடன் இணையும் சந்தோஷ் நாராயணன்

ranjith santhosh narayananரஜினியின் நடிப்பில் 160வது படமாக உருவாகி வரும் படம் 2.0.


இதனையடுத்து தன் 161வது படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கும், தயாரிக்கும் வாய்ப்பை தனுஷ்க்கும் அளித்தார் ரஜினி.


இந்த மே மாதம் 3வது வாரத்திற்குள் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகளை துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.


ஏற்கெனவே ரஜினியின் கபாலி, தனுஷின் கொடி, வடசென்னை ஆகிய படங்களுக்கு சந்தோஷ் இசையமைத்திருந்தார். (வடசென்னை தற்போது உருவாகி வருகிறது)


மேலும் ரஞ்சித் இயக்கிய எல்லா படங்களுக்கும் இவரே இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Santhosh Narayanan teams up with Rajini Dhanush combo project

0 comments:

Post a Comment