Saturday, May 6, 2017

நரகாசுரன் படத்திலிருந்து நாக சைதன்யா விலகல்


நரகாசுரன் படத்திலிருந்து நாக சைதன்யா விலகல்



06 மே,2017 - 15:28 IST






எழுத்தின் அளவு:








கடந்த வருடம் வெளியான படங்களில் ரகுமான் நடித்த துருவங்கள் 16 படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது. அப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தின் பெயர் நரகாசுரன் என்று அறிவித்தார் கார்த்திக் நரேன். தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு கதாநாயகர்கள் நரகாசுரன் படத்தில் நடிப்பார்கள் என்று தெரிவித்திருந்தார் கார்த்திக் நரேன். அதன்படி, தமிழிலிருந்து அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். தெலுங்கிலிருந்து நாக சைதன்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கடந்த மாதம் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏற்கெனவே ஒப்புக் கொண்ட படங்களின் கால்ஷீட் குழப்பத்தினால், தற்போது நரகாசுரன் படத்திலிருந்து விலகியுள்ளார் நாக சைதன்யா. இந்தப்படத்தில் நெகட்டிவ்வான வேடத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார்கள். நரகாசுரன் படத்தை கவுதம் மேனன் உடன் இணைந்து கார்த்தி நரேன் தயாரிக்கிறார்.


0 comments:

Post a Comment