'மகாபாரதம்' பட தயாரிப்பாளருக்கு 'புலி முருகன்' பட தயாரிப்பாளர் வேண்டுகோள்..!
05 மே,2017 - 15:13 IST
மோகன்லால் பீமனாக நடிக்க மற்றும் தென்னிந்திய, வட இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பில் சுமார் 1௦௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரலாற்று காவியமான 'மாகாபாரதம்' உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டது. மாகாபாரதத்தை தழுவி எம்.டி.வாசுதேவன நாயர் எழுதிய ரண்டமூழம் நாவல் தான் திரைப்படமாக உருவாகிறது. துபாயை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி என்பவர்தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இத்தனை கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பது சாத்தியமாக இருக்கலாம்.. ஆனால் போட்ட அசலை திரும்பவும் லாபத்துடன் எடுப்பது சாத்தியமா என ஒரு தரப்பினர் விவாதித்து வருகின்றனர்..
இதுகுறித்து சமீபத்தில் மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தோமிச்சன் முளகுபாடத்திடம் கேட்கப்பட்டது.. மலையாள சினிமாவில் ஒரு குறிப்பிட்ட அளவிலான பட்ஜெட்டில் மட்டுமே படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தநிலையில் பல கோடிகளை அள்ளி இறைத்து, 'புலி முருகன்' படத்தை தயாரித்து, இறைத்த பணத்தை விட பலமடங்கு லாபத்தை ஈட்டியவர் தான் இந்த தோமிச்சன் முளகுபாடம்.. தவிர மலையாள சினிமாவின் தயாரிப்பு செலவு, மற்றும் வியாபார எல்லையை 'புலி முருகன்' மூலம் அகலப்படுத்தியவர் இவர்.
மகாபாரதம் பட தயாரிப்பு செலவு விவாதம் குறித்து தோமிச்சன் கூறுகையில், “எந்த ஒரு படத்திற்கும் பட்ஜெட்டை தீர்மானிக்கும்போது அதை நம்மால் திருப்பி எடுக்க முடியுமா என்கிற கணக்கையும் பார்த்தே படத்தை ஆரம்பிப்பார்கள்.. 'மாகாபாரதம்' படததை பொறுத்தவரை மோகன்லால், கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் என இரண்டு ஜாம்பவான்கள் இருப்பதால், இந்தப்படத்தை தயாரிக்கும் பி.ஆர்.ஷெட்டிக்கு இதிலிருந்து பின்வாங்க வேண்டிய அவசியமே இல்லை.. துணிந்து படத்தை ஆரம்பிக்கலாம்” என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment