வங்காளத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய தனி ஒருவன்
05 மே,2017 - 15:27 IST
வங்காளப் படம் என்றால் கலைப் படங்கள்தான் என்ற நிலை மாறி. அங்கேயும் பக்கா கமர்ஷியல் படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக மற்ற மாநில மொழிகளில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் ரீமேக் உரிமத்தை வாங்கி வங்க மொழியில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இதுவரை வெளிவந்த ரீமேக் படங்களிலேயே தமிழில் வெளிவந்த தனி ஒருவன் ரீமேக்தான் அதிகமாக வசூலித்து ரிக்கார்ட் பிரேக் ஏற்படுத்தியுள்ளது.
தனிஒருவன் அங்கு ஒன் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதனை பிஸ்ரா தாஸ்குப்தா இயக்கினார். தமிழில் ஜெயம்ரவி நடித்த கேரக்ரில் யாஷ்தாஸ் குப்தா நடித்துள்ளார், அரவிந்த்சாமி கேரக்டரில் ப்ரோசன்ஜித் சட்டர்ஜி நடித்துள்ளார், நயன்தாரா கேரக்டரில் நுஸ்ரத் ஜஹான் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ந் தேதி வெளியான இந்தப் படம் வங்காளத்தில் வரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது பெங்காளி மக்கள் வசிக்கும் திரிபுரா, அஸ்ஸாம், ஜார்கண்ட் மாநிலத்திலும் வெற்றிகரகமா ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் உள்ள வங்காள மக்கள் பார்ப்பதற்கு வசதியாக சென்னையிலும் ஒரு தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.
0 comments:
Post a Comment