Wednesday, May 3, 2017

நிவின்பாலி ஹீரோயினுக்கு அப்பம் வழங்கி அசத்திய பவன் கல்யாண்..!


நிவின்பாலி ஹீரோயினுக்கு அப்பம் வழங்கி அசத்திய பவன் கல்யாண்..!



03 மே,2017 - 16:46 IST






எழுத்தின் அளவு:








நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.. அதன்பின் ஒருமுறை துல்கர் பட வாய்ப்பு தேடிவந்தும் அதை கோட்டை விட்டவர்.. இன்னொருமுறை சில நாட்கள் மட்டுமே துல்கர் ஜோடியாக நடித்த நிலையில் அந்தப்படத்தில் இருந்து தூக்கப்பட்டவர்.. அவ்வளவுதான் அவரது சினிமா வாய்ப்பு என நினைத்த நிலையில் தெலுங்கில் இவர் நடித்து 'மஞ்சு' படம் ஹிட்டாகி, அடுத்து இவரை பவன் கல்யாண் படத்தில் அவருக்கு ஜோடியாக்கி அதிர்ஷ்ட கிரீடம் சூட்டியது. அதை தொடர்ந்து விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்தது..

தற்போது பவன் கல்யாணுடன் நடித்து வரும் அனு இம்மானுவேல், ஷூட்டிங் ஸ்பாட்டில் பவனின் அசத்தல் ட்ரீட்டால் அசந்துபோய் விட்டாராம். பவன் கல்யாணை பொறுத்தவரை அவருடன் நடிப்பவர்களுக்கு அவரது தோட்டத்தில் விளைந்த மாம்பழங்கள் கூடை கூடையாக பரிசாக கொடுக்கப்படுவது வாடிக்கை தான். இந்தமுறை ஷூட்டிங்ஸ்பாட்டில் அனுவிடம் அவரது பேவரைட் உணவு எது என பவன் கேட்க, தனக்கு அப்பம் ரொம்ப பிடிக்கும் என்றாராம் அனு.. மறுநாளே ஆந்திர பூமியில் நடைபெற்ற ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு அனுவை தேடி வந்தது கேரளத்து அப்பம். ஆம்.. பவன் கல்யாண் தனது வீட்டிலிருந்தே இந்த அப்பத்தை பிரத்யேகமாக செய்யச் சொல்லி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டுவர செய்தாராம். பவன் கல்யாணின் இந்த அதிரடி அன்பு தாக்குதலில் திகைத்துப்போய் விட்டாராம் அனு இம்மானுவேல்.


0 comments:

Post a Comment