ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய டி.இமான்!
03 மே,2017 - 14:08 IST
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளரானவர் டி.இமான். அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான மைனா படத்திற்கு இசையமைத்து பிரபலமான அவர், தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அதோடு, இதுவரை அமுல்பேபி போன்ற தோற்றத்தில் இருந்தார் அவர். ஆனால் தற்போது அனைவருமே ஆச்சர்யப்படும் அளவுக்கு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி விட்டார் டி.இமான்.
இதுபற்றி அவர் கூறுகையில், சின்ன வயதில் இருந்தே நான் சாப்பாட்டு பிரியன். ஆசைப்பட்டதை உடனே சாப்பிட்டு விடுவேன். பிரியாணி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்படி விரும்பிய உணவுகளை இஷ்டத்துக்கு சாப்பிட்டதால் உடம்பும் பெருத்து விட்டது. ஆனால், அப்படி உடம்பு குண்டாக இருந்தால் ஆரோக்கியம் கெட்டு விடும் என்பதால், இப்போது டயட்ஸ் மற்றும் உடற்பயிற்சி மூலம் ஸ்லிம்மாகி விட்டேன். அந்த வகையில், 100 கிலோவுக்கு மேல் இருந்த நான், இப்போது 75 கிலோதான் இருக்கிறேன். இனிமேல் இந்த உடல்கட்டை அப்படியே பராமரிப்பேன் என்கிறார் டி.இமான்.
0 comments:
Post a Comment