Friday, May 5, 2017

விஜய்யின் சாமர்த்திய பதிலால் அசந்துபோன பாடலாசிரியர் விவேக்


lyricist vivekஅட்லி இயக்கிவரும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டளாமே நடித்து வருகிறது.


ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் இடம்பெற்றுள்ள விஜய்யின் அறிமுக பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறாராம்.

மேலும் மற்றொரு பாடலை எழுதும் வாய்ப்பையும் இவருக்கு கொடுத்திருக்கிறார் அட்லி.

இந்நிலையில் இதன் சூட்டிங் தளத்திற்கு சென்ற விவேக் விஜய்யை சந்தித்துள்ளார்.

அப்போது கத்தி வைத்துக் கொண்டு விஜய் போடும் சண்டைக் காட்சியை பார்த்தாராம்.

அதன்பின்னர் எப்படி இவ்வளவு நுனுக்கமாக சண்டை போட்டீர்கள் என்று கேட்டராம்.

அதற்கு விஜய் நேரிடையாக பதிலளிக்காமல், நீங்கள் எப்படி? சரியான இடத்தில் சரியான வார்த்தைகளை நிரப்பி பாடல்களை எழுதுகிறீர்கள் என கேட்டாராம்.

அவரின் இந்த சாமர்த்திய பதிலால் தான் அசந்து போனதாக தெரிவித்துள்ளார் பாடல் ஆசிரியர் விவேக்.

0 comments:

Post a Comment