டிவி நடிகர் பிரதீப் தற்கொலையில் நீடிக்கும் மர்மம்
05 மே,2017 - 10:28 IST
சுமங்கலி சீரியலில் நாயகனாக நடித்து வந்தவர் பிரதீப். இவரது மனைவி பாகினி ரெட்டி. அவரும் தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். பிரதீப்-பாகினி ரெட்டி இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பிரதீப்பின் பெற்றோர் சென்னையிலுள்ள போரூரில் வசித்து வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகு பாகினி ரெட்டியுடன் ஐதராபாத் பப்புல்லாகுடாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார் பிரதீப்.
இந்நிலையில், கடந்த 3-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் பிரதீப் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர். அதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான காரணம் என்ன என்பது குறித்த எந்த தகவல்களும் விசாரணையில் வெளியாகவில்லை.
ஆனால் இதுகுறித்து தமிழ் சின்னத்திரை வட்டார நடிகர்களிடம் விசாரித்தபோது, பிரதீப் தனது குடும்பத்தினருடன் சமீபகாலமாக ஏதோ மனக்கசப்பில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அதேசமயம், அவரது பெற்றோருடன் பிரச்சினையா? இல்லை மனைவியுடன் பிரச்சினையா? என்பது குறித்து தெரியவில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்ட அன்று சீரியலில் நடித்து விட்டு இரவு வீடு திரும்பிய பிரதீப், மனைவி பாகினியிடம் சண்டை போட்டதாகவும், அதையடுத்து, வீட்டின் ஹாலில் இருந்த சில பொருட்களை போட்டு உடைத்து விட்டு, தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டதாகவும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் தெரிவித்ததாக சில சீரியல் நடிகர்கள் கூறுகிறார்கள். இதை வைத்துப்பார்க்கையில், பிரதீப்- பாகினி ரெட்டிக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாககூட அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் பேசிக்கொள்கிறார்கள். என்றாலும், போலீஸ் விசாரணையில்தான் நடி கர் பிரதீப் தற்கொலை குறித்த உண்மையான தகவல் வெளியாகும்.
0 comments:
Post a Comment