ஜாக்கிசான் எனது ரோல்மாடல் -உமாபதி ராமைய்யா
05 மே,2017 - 10:53 IST
நடிகர் தம்பி ராமைய்யாவின் வாரிசு உமாபதி ராமைய்யா. தற்போது அதாகப்பட்டது மகாஜனங்களே, தேவதாஸ் என இரண்டு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதில் இன்பசேகரன் இயக்கியுள்ள அதாகப்பட்டது மகாஜனங் களே படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இந்த படங்கள் பற்றி உமாபதி ராமைய்யா கூறுகையில், அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் ரொமான்டிக் காமெடி கதையில் நடித்திருக்கிறேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சின்ன விசயம்தான் இப்படம். படத்தை பார்த்து விட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், இந்த மாதிரி நம்ம வாழ்க்கையிலும் நடந்திருக்கில்ல என்று நினைத்துக்கொள்வார்கள். அந்த மாதிரியான ஒரு கதைதான் இந்த படம். பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி இருக்கும். அடுத்து, தேவதாஸ் படத்தில் 2003ல் நடக்கும் காதல் கதையில் தாடி வைத்த கெட்டப்பில் நடித்துள்ளேன். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
மேலும், நான் நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் என்றாலும், நடிகனாவதற்கு முன்பு ஒருநாள்கூட சூட்டிங் பார்த்ததில்லை. அதனால் முதல் மூன்று நாட்கள் நடிப்பது கஷ்டமாக தெரிந்தது. பின்னர் எளிதாகி விட்டது. முக்கியமாக எனது ரோல் மாடல் ஜாக்கிசான். சின்ன வயதில் இருந்தே அவரது நடிப்பு ரொம்ப பிடிக் கும். அதனால் அவர் பேட்டனில் லைவாக காமெடி கலந்த கதைகளில் நடிக்க விரும்புகிறேன். அவரது தனித்துவத்தை பின்பற்றி எனது நடிப்பில் ஒரு புதிய பாணியை வெளிப்படுத்த ஆசைப்படுகிறேன் என்கிறார் உமாபதி ராமைய்யா.
0 comments:
Post a Comment